மாநில செய்திகள்

கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு + "||" + Chief Minister Palanisamy meets Governor Banwarilal Purohit

கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார்.
சென்னை,

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.


இந்த சந்திப்பின்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்கிறார். மேலும், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் அப்போது அவர் வழங்குகிறார் என்று கூறப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.