மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல் + "||" + 5,395 more people in Tamil Nadu affected by corona today - Health Department information

தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,25,391 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 62 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,846 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,572 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,69,664 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 45,881 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,367 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,74,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
3. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்
தமிழகத்தில் இன்று மேலும் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.