தேசிய செய்திகள்

நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை: ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு + "||" + This year's compensation cess collected amounting to Rs 20,000 crores will be disbursed to the States tonight: Finance Minister Nirmala

நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை: ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை: ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. காணொளியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில மற்றும் யூனியம் பிரதேசங்களின் நிதிமந்திரிகள் கலந்து கொண்டனர்.


இந்நிலையில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இன்று நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.20,000 கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையான ரூ.24,000 கோடி அடுத்த வார இறுதிக்குள் வழங்கப்படும் என்றார்.

இதுவரை வசூலிக்கப்பட்ட இழப்பீட்டு வரியில் ரூ.20 ஆயிரம் கோடியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.