மாநில செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பெண்களை பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு தனி நீதிமன்றம்; பேரணியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + DMK A special separate court in each district to protect women when they come to power; MK Stalin's speech

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பெண்களை பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு தனி நீதிமன்றம்; பேரணியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பெண்களை பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு தனி நீதிமன்றம்; பேரணியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழக பெண்களை பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மகளிரணியினர் நடத்திய பேரணியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,

உத்தரபிரதேசத்தில் நடந்த இளம்பெண் பாலியல் வன்முறையை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அப்பாவி இளம்பெண்ணை, அங்கு இருக்கக்கூடிய 4 கயவர்கள் பல்வேறு கொடுமைகளை செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள அக்கிரமங்களை கண்டிக்கக் கூடிய வகையில் இந்த போராட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நியாயம் கேட்க, நீதி கேட்க, இதுபோன்ற கொடுமைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வற்புறுத்தி கவர்னர் மாளிகை நோக்கி மகளிரணியினர் கையில் ஒளியேந்தி பேரணி தொடங்குகிறது. தலித் இனத்தை சேர்ந்த ஒரு அப்பாவி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அந்த பெண்ணின் நாக்கு அறுக்கப்பட்டு உள்ளது. அவரது உடலை பெற்றோரிடம் கூட காட்டாமல் அவசர, அவசரமாக அவர்களே எரித்து அடக்கம் செய்திருக்கிறார்கள்.

இது நியாயமா? என்று தட்டிக்கேட்க, அந்த பெண்ணை பறிகொடுத்த பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூற அகில இந்திய தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கிற ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்காகாந்தி ஆகியோர் நேரில் சென்றனர். அவர்களை தடுத்து இருக்கிறார்கள்.

தடுத்ததோடு மட்டும் இல்லாமல் அவர்களை பலவந்தமாக தாக்கி இருக்கிறார்கள். கீழே தள்ளி இருக்கிறார்கள். ராகுல்காந்தியை கீழே தள்ளி இருக்கிறார்கள் என்று கருதக்கூடாது, ஜனநாயகத்தை தள்ளி இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கிற மாநிலங்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கையில் பெண்கள் அதிகம் சித்ரவதைக்கு ஆளாகிற மாநிலங்களில், பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு உள்ளாகிற மாநிலங்களில், முதல் இடம் உத்தரபிரதேசம். அடுத்த இடம் தமிழ்நாடு. இப்போது நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியிலேயே, பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்கள், 400-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து மிரட்டிய சம்பவத்தை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இதுவரையில் இதற்கு நீதி கிடைத்து இருக்கிறதா? நியாயம் கிடைத்து இருக்கிறதா? இல்லை. காரணம், இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள். கட்சியில் முக்கிய பதவிகளில் இருக்க கூடிய ஒருவர் இருப்பதால் இதுவரையில் நீதி, நியாயம் வழங்கப்படவில்லை. அதற்கு நேர்மாறாக என்ன நடந்தது என்றால், போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்த காரணத்தால், வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தால் ஒரு பெண்ணை கைது செய்து, வழக்குப்போட்டு இருக்கிறார்களே தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை.

உத்தரபிரதேசம் இன்றைக்கு ரத்தப் பிரதேசமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதை தடுத்தாக வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. சி.பி.ஐ.விசாரணை நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார்கள். அது நியாயமாக நடைபெறுமா? நடக்காது.

நான் தி.மு.க. சார்பில் கேட்பது என்னவென்றால் கோர்ட்டின் கண்காணிப்பில் தான் விசாரணை நடைபெற வேண்டும். அப்போது தான் நியாயம் கிடைக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விரைவில் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது. அப்படி வரப்போகிற நேரத்தில் உடனடியாக தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு தனி நீதிமன்றம் நிச்சயமாக அமைக்கப்படும். இதில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நீதியை வழங்குவோம்.  இவ்வாறு அவர் பேசினார்.

பேரணியில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ததை கண்டித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஹாத்ரஸ் அராஜகத்தைக் கண்டித்து தி.மு.க. மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. உத்தரபிரதேச கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது. தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறதா?  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி சித்தராமையா பேச்சு
நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
2. மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழா: கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்யும் தேசிய கல்வி கொள்கை
கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்று மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
3. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவிகள் செய்யப்படும் உத்தவ் தாக்கரே பேச்சு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவிகள் செய்யப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
4. கர்நாடகத்தில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்தப்படும் மந்திரி ஈசுவரப்பா பேச்சு
கர்நாடகத்தில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
5. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்படு கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.