தேசிய செய்திகள்

ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி : ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு + "||" + Submarine anti-missile test successful in Odisha Defense Minister Rajnath Singh's praise

ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி : ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு

ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி : ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு
ஒடிசாவில் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டார்பிடோ எனப்படும் நீர்மூழ்கி குண்டுகளை செலுத்த உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒன்றை இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நேற்று ஒடிசாவின் வீலர் தீவில் பரிசோதித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையின் போது குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது. குறிப்பாக வேகக்குறைப்பு மெக்கானிசத்தை நிலைநிறுத்துதல், டார்பிடோவை வெளிதள்ளுதல், கூம்பு பிரிதல் உள்ளிட்ட ஏவுகணையின் அனைத்து நோக்கங்களும் வெற்றிகரமாக எட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதன் மூலம் நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான தளவாட உருவாக்கத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. கூறியுள்ளது.

‘ஸ்மார்ட்’ சோதனையை வெற்றிகரமாக நடத்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘சூப்பர்சானிக் ஏவுகணை உதவியுடன் டார்பிடோ ஏவுதலை டி.ஆர்.டி.ஏ. வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான தளவாட தயாரிப்பில் இது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனையாகும்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் விமானத்தில் இருந்து ஏவுகணை சோதனை
ஒடிசாவில் விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
2. ஒடிசாவில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவலர் கைது
ஒடிசாவில் கைதிக்கு ஜாமீன் வழங்க நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
3. “ஒடிசாவின் பகுதிகளில் நாங்கள் அத்துமீறவில்லை” - நீதிமன்றத்தில் ஆந்திர அரசு பதில்
ஒடிசாவின் பகுதிகளில் அத்துமீறவில்லை என உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு பதிலளித்துள்ளது.
4. ஒடிசாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று
ஒடிசாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 9 மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோவில் திறக்கப்பட்டது; ஜனவரி 3 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. ஜனவரி 3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.