உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடியாக உயந்துள்ளது.
ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்துக்கொண்டு வைத்திருக்கிறது. தொற்று பரவி கிட்டதட்ட 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் கோர தாண்டவம் அடங்கியபாடில்லை. கொரோனா தொற்று வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது இன்னும் உலகின் முன்னணி நாடுகளுக்கே சவாலாக உள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,35,694,015-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,859,821 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 45 ஆயிரத்து 878-பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 88 ஆயிரத்து 316-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 792-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 7,678,936, உயிரிழப்பு -215,023, குணமடைந்தோர் -4,890,723
பிரேசில் - பாதிப்பு -4,940,499, உயிரிழப்பு - 146,773, குணமடைந்தோர் - 4,295,302
ரஷியா - பாதிப்பு -1,225,889, உயிரிழப்பு - 21,475, குணமடைந்தோர் - 982,324
கொலம்பியா - பாதிப்பு - 862,158, உயிரிழப்பு -26,844, குணமடைந்தோர் - 766,300