உலக செய்திகள்

உலக மக்கள் தொகையில் 10% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- உலக சுகாதார அமைப்பு + "||" + Ten percent of world’s population may have had COVID-19, WHO says

உலக மக்கள் தொகையில் 10% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- உலக சுகாதார அமைப்பு

உலக மக்கள் தொகையில் 10% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்-  உலக சுகாதார அமைப்பு
உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில்  பேசிய அவா் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து விரிவடையும். எனினும் அந்தத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும், உயிா்களை காக்கவும் வழிகள் உள்ளன. இதுவரை பலா் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிா்களை காப்பாற்ற முடியும்.

தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள்தொகையில் சுமாா் 10% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது” என்றார்

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர்
2. இத்தாலியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,886 பேருக்கு தொற்று உறுதி
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28.68 லட்சத்தை கடந்தது.
3. கேரளா, மராட்டியம் உள்பட ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
கேரளா, மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
4. கேரளாவில் மேலும் 4,505- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,505- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கும் பகிருங்கள் - உலக சுகாதார நிறுவனம்
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில், சில நாடுகள் தேசியவாதத்தை கடைப்பிடித்து வருவது, உலகை பேரழிவின் விளிம்பில் நிறுத்தி இருப்பதாக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறி உள்ளா