உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு + "||" + Petition in Supreme Court demanding move to impose President’s rule in Uttar Pradesh
உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினத்தைச் சோந்த 19-வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உத்தர பிரதேச போலீசார் கையாண்ட விதமும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்களின் நலன் கருதி உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சி.எல். ஜெயசுகின் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.