திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு + "||" + As per orders of the Central Government, cinemas/ theatres/multiplexes will be reopening from 15th October.
திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு
வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனப்டி, தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல்களும் இன்று வெளியிட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசு வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது: ”திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கான ‘கோவிஷீல்டு' தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்று அறிவிக்க வேண்டும். அந்த ஊசியை போட்டதால் பாதிக்கப்பட்ட தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று தன்னார்வலர் தொடர்ந்த வழக்கிற்கு மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.