தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 104 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona impact on 104 more policemen in Maharastra today

மராட்டியத்தில் இன்று மேலும் 104 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் இன்று மேலும் 104 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 104 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை, 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் மாநிலத்தில் போலீசாரும் அதிகளவில் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 104 போலீசார் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இதுவரை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 24,254 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 21.423 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 2,578 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல புதிதாக 2 போலீசார் கொரோனாவுக்கு பலியானதால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 253 ஆக உயர்ந்து உள்ளது. 

இதேபோல இதுவரை ஊரடங்கை மீறியது தொடா்பாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 281 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 39,666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.29 கோடியே 99 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் புதிதாக இன்று மேலும் 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைப்பு
மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைக்கப்பட்டு இருப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
3. மராட்டியத்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டிய மாநில துணை-முதல் மந்திரி அஜித்பாவருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநில துணை-முதல் மந்திரி அஜித்பாவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை தகவல்
மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.