மாநில செய்திகள்

வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் + "||" + Farmers will decide on sales and pricing by agricultural law: Union Minister Nirmala Sitharaman

வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு பட்டியலில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான வேளாண் வர்த்தகத்தை மட்டுமே மாற்றியுள்ளோம். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். 

சந்தை, உட்கட்டமைப்பு வரி, இடைத்தரகர் வரி என சுமார் 8 சதவீத வரியை செலுத்துவதில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும். ஏபிஎம்சி சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்தால், 8.5 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இடைத்தரகர்களுக்கு பணம் வழங்க வேண்டும். வெளியே விற்பனை செய்தால், விவசாயிகள் வரி செலுத்த தேவையில்லை. விளைபொருட்களை பெற்றவுடன் ரசீதும் 3ல் 2 பங்கு தொகையும் உடனே வழங்க வேண்டும்.

வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை. உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் உள்ளது. வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சியே. ஆதாயம் கிடைக்கக் கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளை பொருட்களை விற்கலாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்ட விவகாரம்; இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை மறித்தவர் கைது
பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை மறித்தவர் கைது செய்யப்பட்டார்.
2. தலைவாசல் அருகே ஏரியில் இருந்து மண்ணை திருடி மணல் தயாரித்து விற்ற 10 பேர் கைது
தலைவாசல் அருகே ஏரியில் இருந்து மண்ணை திருடி, அதனை வீடு கட்ட மணலாக தயாரித்து விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் பொக்லைன் எந்திரம், 60 டன் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
3. வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
4. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் கரும்பு விற்பனை மும்முரம் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் நேற்று கரும்பு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
5. வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.