மாநில செய்திகள்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனை + "||" + Ministers again consult with Deputy Chief Minister O. Panneerselvam

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை, 

சென்னையில் இன்று காலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். நாளை முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஓ.பி.எஸ். உடன் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

தொடர்ந்து 2.30 மணி நேரம் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் ஆலோசனை நிறைவடைந்த நிலையில், பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன்  அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர். 

நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.