சினிமா செய்திகள்

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் நடிகை மதுபாலா ஆவேசம் + "||" + Popular Tamil heroine's strong statement on Hathras rape incident!

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் நடிகை மதுபாலா ஆவேசம்

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் நடிகை  மதுபாலா ஆவேசம்
குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என ஹாத்ரஸ் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக நடிகை மதுபாலா ஆவேசமாக பேசி உள்ளார்.
மும்பை

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த 
சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரியிருக்கிறது.

இதற்கிடையே, ஹாத்ரஸ் சம்பவம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாலியல் வல்லுறவு 
குற்றங்கள் தொடர்ந்து பதிவாகி வருவது, பல துறைகளில் உள்ளவர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு பல துறையை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நடிகை மதுபாலா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 

வெளியிட்டுள்ள காணொளியில் உணர்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார்.கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் மக்கள் எதிர்மறை தாக்கத்தை கூட சாதமாக எதிர்கொண்டு வாழப் 
பழகியதை பற்றி சில நிமிடங்கள் பேசிய அவர், பிறகு பாலியல் வல்லுறவு குற்றவாளிகளின் செயல்பாடு குறித்தும் 
விரிவாகப் பேசி அவர்களை சட்டமியற்றும் இடத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் 
கூறியிருக்கிறார்.

அக்டோபர் 1ஆம் தேதி அந்த காணொளியை நடிகை மதுபாலா வெளியிட்டிருந்தாலும், அது சமூக ஊடக தளங்களில் பெரிதாக ஈர்க்கப்படாத நிலையில், நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு சுந்தர் அவரது காணொளி இடம்பெற்ற பக்கத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் இருந்து ரீ-டிவீட் செய்ததும் அது வைரலாகி வருகிறது.