ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,
13-வது ஐபிஎல் சீசனின் 20-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டிவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் பந்து வீச்சைத் துவங்க உள்ளனர்.