சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் உயிரிழந்தார் + "||" + Bollywood actor Ajay Devgn's brother Anil Devgan has passed away

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் உயிரிழந்தார்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் உயிரிழந்தார்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் நேற்று உயிரிழந்தார்.
மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரரும், இயக்குனருமான அனில் தேவ்கன்(வயது 45) உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இந்த தகவலை அஜய் தேவ்கன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரரின் திடீர் மரணம் தனது குடும்பத்தினரின் இதயத்தை உடையச் செய்துள்ளது என்று அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும், கொரோனா தொற்று காரணமாக நாங்கள் இறுதி அஞ்சலி கூட்டத்தை நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


திரைப்பட இயக்குநரான அனில் தேவ்கன் தனது அண்ணன் அஜய் தேவ்கன் நடித்த ராஜு ஜாஜா, பிளாக்மெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும் ஜான், பியார் டு ஹோனா ஹய் தா, சன் ஆஃப் சர்தார் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.