கிரிக்கெட்

ஐபிஎல் டி-20 கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + IPL T20 Cricket: Rajasthan Royals set a target of 194 for victory

ஐபிஎல் டி-20 கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் டி-20 கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில், மும்பை அணி எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி, 

13-வது ஐபிஎல் சீசனின் 20-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டிவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. 

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் டி காக் 23(15) ரன்களும், ரோகித் சர்மா 35(23) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷான் (0) ரன் ஏதும் எடுக்காமலும், குர்ணால் பாண்ட்யா 12(17) ரன்களும் எடுத்து வெளியேறினர். 

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் தனது அரைசத்தை பதிவு செய்து அசத்தினார். முடிவில் தொடர்ந்து அதிரடியில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் 79(47) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 30(19) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால் 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் தியாகி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதன்மூலம் மும்பை அணி எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் டி-20 கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.