தேசிய செய்திகள்

தொடர்ந்து 5-வது நாளாக தொற்று பாதிப்பு குறைவு; 13.75 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் + "||" + Decreased risk of infection for the 5th consecutive day; Only 13.75 percent receive treatment

தொடர்ந்து 5-வது நாளாக தொற்று பாதிப்பு குறைவு; 13.75 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்

தொடர்ந்து 5-வது நாளாக தொற்று பாதிப்பு குறைவு; 13.75 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து 5-வது நாளாக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் 13.75 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
புதுடெல்லி,

சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், 10 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக அமெரிக்கா தொடர்கிறது.

உலகளவில் 3.58 கோடி பேருக்கு தொற்று பாதித்துள்ளது. அமெரிக்காவில் மட்டுமே 76.82 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக நம் நாடு உள்ளது. தொடர்ந்து பிரேசில் (49.40 லட்சம்), ரஷியா (12.37 லட்சம்), கொலம்பியா (8.62 லட்சம்) ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் தொற்று பாதிப்பு சற்றே குறைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 1-ந் தேதி 86 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று பதிவானது. 2-ந் தேதி அது 81 ஆயிரத்து 484 ஆகவும், 3-ந் தேதி 79 ஆயிரத்து 476 ஆகவும், 4-ந் தேதி 75 ஆயிரத்து 829 ஆகவும், 5-ந் தேதி 74 ஆயிரத்து 442 ஆகவும், நேற்று (6-ந் தேதி) 61 ஆயிரத்து 267 ஆகவும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 10 லட்சத்து 89 ஆயிரத்து 403 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் நேற்று 61 ஆயிரத்து 267 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 787 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

தொற்று பாதித்தோர் எண்ணிக்கையை விட ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பியோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் அதிகம் என்பது கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்து 62 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது. மீண்டவர்களில் 74 சதவீதம்பேர், மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம், தமிழகம், கேரளா, உத்தரபிரதேசம், ஒடிசா, டெல்லி, சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான். மேலும் இந்தியாவில் மீட்பு விகிதமும் 84.70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு நேற்று 884 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி 1 லட்சத்து 3 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் பலி விகிதம் என்பது 1.55 சதவீதமாக குறைந்துள்ளது.

நேற்று பலியான 884 பேரில், 263 பேர் மராட்டிய மாநிலத்தவர் ஆவர். கர்நாடகத்தில் 84 பேரும், உத்தரபிரதேசத்தில் 63 பேரும், மேற்கு வங்காளத்தில் 61 பேரும், பஞ்சாப்பிலும், ஆந்திராவிலும் தலா 38 பேரும், சத்தீஷ்காரில் 36 பேரும், டெல்லியில் 32 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மொத்த பலியான 1 லட்சத்து 3 ஆயிரத்து 569-ல் அதிக பலியுடன் மராட்டியம் (38 ஆயிரத்து 347) முதல் இடத்தில் தொடர்கிறது. அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. 3-வது இடத்தை கர்நாடகம் (9,370) வகிக்கிறது. உத்தரபிரதேசத்தில் 6,092 பேரும், ஆந்திராவில் 6.019 பேரும், டெல்லியில் 5,542 பேரும் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 19 ஆயிரத்து 23 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 13.75 சதவீதம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாட்டில் 8 கோடியே 10 லட்சத்து 71 ஆயிரத்து 797 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளிவிவரம் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
2. தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.
3. மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசகொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்து உள்ளார்.
4. இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
5. முகக்கவசம் அணிய மறந்ததால் பதறிப்போன ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் -வீடியோ
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்ற அவையில் முகக்கவசம் அணிய மறந்ததால், பதறி போய் மாஸ்க்கை தேடி ஓடிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.