தேசிய செய்திகள்

2ஜி வழக்கில் மத்திய அரசு அறிவுரைப்படியே மேல்முறையீடு செய்யப்பட்டது; டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம் + "||" + The 2G case was appealed on the advice of the Central Government; CBI files case in Delhi High Court Argument

2ஜி வழக்கில் மத்திய அரசு அறிவுரைப்படியே மேல்முறையீடு செய்யப்பட்டது; டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்

2ஜி வழக்கில் மத்திய அரசு அறிவுரைப்படியே மேல்முறையீடு செய்யப்பட்டது; டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்
2ஜி வழக்கில் மத்திய அரசு அறிவுரைப்படியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது.
புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு மந்திரி ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனி கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தொடர் விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது.

அப்போது சி.பி.ஐ., அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், சஞ்சீவ் பண்டாரி நியமனம், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நியமனம், தனது நியமனம், மத்திய அரசின் அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தார். 2ஜி வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல்களை மத்திய அரசு நியமிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. சி.பி.ஐ. வழக்குகளில் வக்கீல்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

சி.பி.ஐ. யாரை வேண்டுமென்றாலும் அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக நியமிக்க முடியும். துஷார் மேத்தா அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்தான் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில்லை. வக்கீல்கள் சட்டத்தின் படி, மூத்த வக்கீல்கள் வக்காலத்து நாமா, மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்வதில்லை. மத்திய அரசின் அறிவுரைப்படியே 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்து நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை எதிர்மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு தள்ளிவைத்தார்.