உலக செய்திகள்

‘குவாட்’ நாடுகள் கூட்டத்தில் சீனாவின் எழுச்சி குறித்து இந்தியா, அமெரிக்கா ஆலோசனை + "||" + India, US consult on China's rise in 'Quad' meeting

‘குவாட்’ நாடுகள் கூட்டத்தில் சீனாவின் எழுச்சி குறித்து இந்தியா, அமெரிக்கா ஆலோசனை

‘குவாட்’ நாடுகள் கூட்டத்தில் சீனாவின் எழுச்சி குறித்து இந்தியா, அமெரிக்கா ஆலோசனை
‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் சீனாவின் எழுச்சி குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் விவாதித்தன.
டோக்கியோ,

உலக வரைபடத்தில் நாற்கர (குவாட்) வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் குழுவை உருவாக்கி உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.

கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் முதல் முறையாக நேரடியாக பங்கேற்றனர். இந்தியாவின் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்காவின் மைக் பாம்பியோ, ஜப்பானின் டோஷிமிட்சு மொடேகி, ஆஸ்திரேலியாவின் மரைஸ் பெய்ன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த குவாட் குழுவின் அங்கத்தினராக விளங்கும் 4 நாடுகளின் பொதுவான அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது. அந்தவகையில் லடாக் விவகாரத்தில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவுடன் சீனா மோதி வருகிறது. கொரோனா தொற்று, வர்த்தக பிரச்சினை, தொழில்நுட்பம், ஹாங்காங்-தைவான் விவகாரங்கள், மனித உரிமை என பல்வேறு பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் மோதி வருகின்றன.

இதைப்போல ஆஸ்திரேலியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சமீபத்திய மாதங்களாக சீரழிந்து கிடக்கிறது. கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பான் நிர்வகித்து வரும் பல தீவுகளுக்கு சீனா உரிமை கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அந்த இரு நாடுகளும் மோதி வருகின்றன.

இவ்வாறு 4 நாடுகளுக்கும் பொதுவான எதிரியாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிராந்தியத்தில் அந்த நாட்டின் எழுச்சி குறித்து இந்த நாடுகள் நேற்றைய குவாட் குழு கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்தன. இந்த கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவும் கலந்து கொண்டார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோவுடனான சந்திப்பு மூலம் எனது டோக்கியோ பயணம் தொடங்கி இருக்கிறது. பல துறைகளில் நமது ஒத்துழைப்பு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்காக இணைந்து உழைப்போம்’ என்று கூறியிருந்தார்.

இதைப்போல ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ஜப்பானின் புதிய பிரதமராக சுகா கடந்த மாதம் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருடனான ஜெய்சங்கரின் முதலாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை
காரைக்காலில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.
2. வடகிழக்கு பருவ மழையை சமாளிப்பது எப்படி? அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை
வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதையொட்டி அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆலோசனை நடத்தினார்.
3. சண்டே மார்க்கெட் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
சண்டே மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட கலெக்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை
கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது நிவாரண உதவிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி கலெக்டர்களுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார்.
5. மராட்டியத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை தயார் நிலையில் மீட்பு படையினர் உத்தவ் தாக்கரே அவசர ஆலோசனை
மராட்டியத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முப்படைகளை தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.