தேசிய செய்திகள்

ரெயில் கிளம்ப 30 நிமிடத்துக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை; 10-ந்தேதி முதல் மீண்டும் அமல் + "||" + 2nd booking schedule 30 minutes before train departure; Re-enactment from 10th

ரெயில் கிளம்ப 30 நிமிடத்துக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை; 10-ந்தேதி முதல் மீண்டும் அமல்

ரெயில் கிளம்ப 30 நிமிடத்துக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை; 10-ந்தேதி முதல் மீண்டும் அமல்
ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறை, 10-ந்தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி,

கொரோனா பரவல் காலத்துக்கு முன்பு, ஒரு ரெயில் புறப்படும் நேரத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்பு, அதன் முதலாவது முன்பதிவு அட்டவணை தயாரித்து வெளியிடப்படும். அதில், காலியாக உள்ள இடங்களுக்கு ரெயில் நிலைய முன்பதிவு கவுண்ட்டர்களிலும், ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.

2-வது முன்பதிவு அட்டவணை, ரெயில் புறப்படும் நேரத்துக்கு 5 முதல் 30 நிமிடத்துக்கு முன்பு தயாரிக்கப்படும். அதுவரை, கடைசி நேர முன்பதிவு அனுமதிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே எடுக்கப்பட்ட டிக்கெட்டுகள், அந்த நேரத்தில் ரத்து செய்யவும் அனுமதிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில், 2-வது முன்பதிவு அட்டவணை, ரெயில் புறப்படும் நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், கடைசிநேர முன்பதிவுக்கான கால அளவு குறைந்துள்ளது.

இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக, 2-வது அட்டவணை தயாரிப்பதில் பழைய முறையே தொடர வேண்டும் என்று ரெயில்வே கோட்டங்கள் கோரிக்கை விடுத்தன.

அதைத்தொடர்ந்து, இதை பரிசீலித்த ரெயில்வே நிர்வாகம், பழைய முறைப்படி, ரெயில் புறப்படும் நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

வருகிற 10-ந்தேதி முதல், இந்த முறை அமலுக்கு வருகிறது. இதற்கேற்ப மென்பொருளில் தேவையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 129 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 129 ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. போலீசார் தாக்கியதில் தமிழர் உயிரிழந்த சம்பவத்தில் 4 போலீசார் பணி இடைநீக்கம்
போலீசார் தாக்கியதில் தமிழர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
3. நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் 2வது அலை; 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு
நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் 2வது அலை பரவ தொடங்கிய நிலையில் பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை 12 நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்.
4. இங்கிலாந்தில் முக கவசங்கள் அணிவது கட்டாயம்; நாளை முதல் புதிய விதிகள் அமல்
இங்கிலாந்து நாட்டில் புதிய விதிகளின்படி வெளியே செல்லும் பொதுமக்கள் நாளை முதல் முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.
5. மணிப்பூரில் நாளை மதியம் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்
மணிப்பூரில் நாளை மதியம் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.