உலக செய்திகள்

கிர்கிஸ்தானில் மக்கள் மாபெரும் போராட்டம்; நாடாளுமன்றம் சூறையாடப்பட்டதால் பரபரப்பு + "||" + The great struggle of the people in Kyrgyzstan; Excitement as Parliament was looted

கிர்கிஸ்தானில் மக்கள் மாபெரும் போராட்டம்; நாடாளுமன்றம் சூறையாடப்பட்டதால் பரபரப்பு

கிர்கிஸ்தானில் மக்கள் மாபெரும் போராட்டம்; நாடாளுமன்றம் சூறையாடப்பட்டதால் பரபரப்பு
கிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் நாடாளுமன்றம் சூறையாடப்பட்டது.
பிஷ்கெக்,

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 16 கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று, 98.14 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் போட்டியிட்ட 16 கட்சிகளில் வெறும் 4 கட்சிகள் மட்டுமே 7 சதவீத வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றது.

இதனால் மற்ற 12 கட்சிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தன. எனவே தேர்தல் முடிவுகளை ஏற்க போவதில்லை என அந்த கட்சிகள் கூட்டாக முடிவு எடுத்தன. அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் பொதுமக்களும் கைகோர்த்ததால் போராட்டம் விசுவரூபம் எடுத்தது. தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சுமார் 600 பேர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து ஆவணங்களை கிழித்தெறிந்தனர்.

இந்த போராட்டத்தால் கிர்கிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழல் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 50 பேர் கைது
கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் 16 பேர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் தீ விபத்து: வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்; 183 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 183 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
4. வனத்துறை விசாரணைக்கு சென்றபோது சாவு: விவசாயி உடலை வாங்க மறுத்து 6-வது நாளாக போராட்டம் நீடிப்பு
வனத்துறை விசாரணைக்கு சென்றபோது உயிரிழந்த விவசாயி உடலை வாங்க மறுத்து நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
5. தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.