மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்துதல் பகுதி 42 ஆக உயர்வு + "||" + Controlling area rises to 42 in Chennai

சென்னையில் கட்டுப்படுத்துதல் பகுதி 42 ஆக உயர்வு

சென்னையில் கட்டுப்படுத்துதல் பகுதி 42 ஆக உயர்வு
சென்னையில் கட்டுப்படுத்துதல் பகுதி 42 ஆக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னை,

கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் புதிதாக பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்து வந்தது. இதனால் கட்டுப்படுத்துதல் பகுதியும் குறைந்தே காணப்பட்டது. அந்த வகையில் கடந்த 2-ந்தேதி சென்னையில் 10 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்துதல் பகுதியாக உள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

இந்தநிலையில் சென்னையில் நாள்தோறும் 1,200 முதல் 1,300 என்ற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரிக்கிறது. இதனால் சென்னையில் 10-ல் இருந்த கட்டுப்படுத்துதல் பகுதி தற்போது 42 ஆக அதிகரித்துள்ளது. 

அந்த வகையில் அம்பத்தூர் மண்டலத்தில் 21 பகுதிகளும், தேனாம்பேட்டை, ஆலந்தூர், அடையாறு மண்டலத்தில் தலா 4 பகுதிகளும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 பகுதியும், சோழிங்கநல்லூர், திரு.வி.க.நகர் மண்டலத்தில் தலா 2 பகுதிகளும், வளசரவாக்கம், அண்ணாநகர் மண்டலத்தில் தலா ஒரு பகுதியும் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு
சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கக முனையத்துக்கு ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய நகரமான முனிச் பன்னாட்டு முனையத்தில் இருந்து பெரிய ரக சரக்கு விமானம் ஒன்று முதல் முறையாக வந்தது.
3. சென்னையில் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் மாற்றம்
சென்னையில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், மாற்றப்பட்டனர். இது தொடர்பான உத்தரவை டி.ஜி.பி.திரிபாதி பிறப்பித்துள்ளார்.
4. சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதல்வர் திட்டம்
இன்று சென்னைக்கு வரும் அமித்ஷாவை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. பிப்ரவரி 25: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.