மாநில செய்திகள்

விஜயகாந்த் நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்- தேமுதிக தகவல் + "||" + vijayakant is well and rumours to not be entertained says official press release #DMDK

விஜயகாந்த் நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்- தேமுதிக தகவல்

விஜயகாந்த் நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்- தேமுதிக தகவல்
விஜயகாந்த் நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தெரிவித்துள்ளது.
சென்னை,

 தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து  இருவரும் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில்  இருந்து கடந்த 2 ஆம் தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இந்நிலையில் விஜயகாந்த்  மீண்டும்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “ தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 அம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. விஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது; முதற்கட்டமாக 14 மாவட்டங்களுக்கு நடந்தது
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது.
2. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு- பிரேமலதா விஜயகாந்த்
இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
3. அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகள் எதிர்பார்க்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதை நாங்கள் தற்போதும் எதிர்பார்க்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
4. இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது- பிரேமலதா விஜயகாந்த்
இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
5. அதிமுக கூட்டணி குறித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்
தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.