உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60-கோடியாக உயர்வு + "||" + world wide covid 19 updates oct 7

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60-கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60-கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3. 60 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்துக்கொண்டு வைத்திருக்கிறது. தொற்று பரவி கிட்டதட்ட 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் கோர தாண்டவம் அடங்கியபாடில்லை. கொரோனா தொற்று வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது இன்னும் உலகின் முன்னணி நாடுகளுக்கே சவாலாக உள்ளது. 

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,037,992-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை  27,143,863 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 54  ஆயிரத்து 514-பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 லட்சத்து 39-ஆயிரத்து 615-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 862-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
  • அமெரிக்கா       -  பாதிப்பு - 7,722,746,  உயிரிழப்பு -215,822, குணமடைந்தோர் -4,935,545
  • பிரேசில்       -    பாதிப்பு -4,970,953,  உயிரிழப்பு - 147,571, குணமடைந்தோர் -   4,352,871
  • ரஷியா        -    பாதிப்பு -1,237,504, உயிரிழப்பு -  21,663, குணமடைந்தோர்  - 988,576
  • கொலம்பியா  -     பாதிப்பு -  869,808, உயிரிழப்பு -27,017, குணமடைந்தோர்  - 770,812

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: புதிதாக 567 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 18,711 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. 562 பேருக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 500-ஐ கடந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 562 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மராட்டிய மாநிலத்தில் உயரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 10,187 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 2,791 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.