தேசிய செய்திகள்

ராகுல் காந்தியுடன் தொடர்பிலிருந்த பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா + "||" + Punjab minister Balbir Sidhu tests Covid positive, had shared stage with Rahul Gandhi

ராகுல் காந்தியுடன் தொடர்பிலிருந்த பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா

ராகுல் காந்தியுடன் தொடர்பிலிருந்த பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா
ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்த பஞ்சாப் அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிர்தசர்ஸ்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார்.  

இந்தப் போராட்டத்தில்  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர்  பால்பீர் சிங் சித்து ஆகியோர் பங்கேற்றனர்.  இதன்பிறகு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பிற்பகல் போராட்டத்தைத் தொடர அவர் ஹரியாணா மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில்,  ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்த அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர் தற்போது நலமுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மோடியின் வாக்கு இயந்திரத்தை கண்டு அஞ்ச மாட்டோம்: ராகுல் காந்தி பாய்ச்சல்
மோடியின் வாக்கு இயந்திரத்தை கண்டு அஞ்சமாட்டோம் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
2. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
3. புதிய வேளாண் சட்டங்கள் ‘ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல்’-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது என்றால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
4. பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.
5. தனிநபர் வருவாயில் வங்கதேசம் இந்தியாவை முந்தப்போகிறது-ராகுல் காந்தி விமர்சனம்
ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகள் குறித்த பொருளாதார வளர்ச்சி அறிக்கை இன்று வெளியிட்டது.