உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல் + "||" + WHO Head Says ‘There Is Hope’ Covid-19 Vaccine May Be Ready By Year-End

கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்

கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் ? - உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்
உலகம் முழுவதும் தற்போது 9 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
ஜெனீவா, 

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுபாடுகளை பல்வேறு நாடுகள் விதித்த போதிலும் தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த  முடியவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஊரடங்கு விதித்த நாடுகளும் பின்னர் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டன. இதனால், தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ளது. 

தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரமாக நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டங்களில் உள்ள தடுப்பூசிகள் எப்போது பொது பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதே பல நாடுகளின் ஏக்கமாக உள்ளது. இந்த நிலையில், இந்நிலையில், கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய  உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை : ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தகவல்
ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2. கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன- உலக சுகாதார அமைப்பு
ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.
3. இந்தியாவில் 100 தன்னார்வலர்களிடம் ரஷ்யாவின் தடுப்பூசியை பரிசோதிக்க திட்டம்
ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என டிசிஜிஐ யின் நிபுணர் குழு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது.
4. சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மாட்டோம்- பிரேசில் அதிபர்
சீனாவின் உகான் நகரில் தான் கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்டது.
5. கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை: பிரேசிலில் தன்னார்வலர் உயிரிழப்பு
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்தது. மருத்துவ பரிசோதனையில் இந்த மருந்து உள்ளது.