மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு + "||" + OBS-EPS visit to AIADMK headquarters - Volunteers warmly welcome

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வருகை தந்தனர். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை,

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே  அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.  ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்பது குறித்த விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்தது. இந்த நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது. 

இதன்படி, இன்று காலை 10 மணியளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.  இதனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். காலை 9.30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் அதிமுக தலைமை அலுவகலத்திற்கு வருகை தந்தனர். இருவரையும் தொண்டர்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.
2. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? நேர்முக உதவியாளர் மகாலிங்கம் தகவல்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.
3. 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம்-எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு தேர்தலில் தொடர் வெற்றிகாண அயராது உழைப்போம் என்று தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
5. புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு
புது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.