தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கொரோனா தொற்று + "||" + India's #COVID19 tally crosses 67-lakh mark with a spike of 72,049 new cases & 986 deaths reported in the last 24 hours.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72,049 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தொற்று பரவல் இன்னும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.  

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 72,049 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 986 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி,  67 லட்சத்து 57 ஆயிரத்து 132 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 07 ஆயிரத்து 883 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 57 லட்சத்து 44 ஆயிரத்து 694 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,04,555 ஆக உயந்ந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 18,711 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 365 ரன்களில் இந்தியா ஆல் அவுட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 96-ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: இன்று புதிதாக 18,327 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
இந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை