மாநில செய்திகள்

தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கவில்லை - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு + "||" + It has been 9 months since the election No funding was provided to local bodies Dr. Ramdas charge

தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கவில்லை - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கவில்லை - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கவில்லை என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்துவிட்டநிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படவேண்டிய நிதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. ஊரகப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளையும், மக்களுக்கான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்குவதில் தமிழக அரசு தேவையற்ற தாமதம் காட்டுவது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித்தேர்தல்கள் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் தாமதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் நடத்தப்பட்டன. அதிலும்கூட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித்தேர்தல்கள் மட்டும் தான் நடத்தப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட, அதனால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகள் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய-மாநில அரசுகள் ஒதுக்காததுதான்.

கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட சிறப்பு வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தவேண்டும். அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கவேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கீடுசெய்யவேண்டும். அதன்மூலம் கிராமங்களில் புதிய மறுமலர்ச்சியை அரசு ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியார் சிலை அவமதிப்பு: சம்பந்தப்பட்டவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2. சென்னை, புறநகரில் குப்பை எரி உலைகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, புறநகரில் குப்பை எரி உலைகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3. மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடிப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடிப்பதா என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. அரசுத்துறை பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை - மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
அரசுத்துறை பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.