தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 132 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 132 police personnel tested positive for COVID19 in the last 24 hours & 4 died, Maharashtra Police

மராட்டியத்தில் இன்று மேலும் 132 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 132 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 132 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை, 

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு  மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது.  கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 132 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,386 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று மேலும் 4 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 21,593 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2,536 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

2. கேரளாவில் இன்று புதிதாக 3,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று புதிதாக 3,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று புதிதாக 479 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று புதிதாக 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ளார்.
5. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று சென்னை வருகை
2 நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார்.