சினிமா செய்திகள்

படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி + "||" + Actor Tovino Thomas hospitalised after accident on Kala set

படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.
எர்ணாகுளம்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த கோதா, அபியம் அனுவம் மற்றும் மாயநாதி போன்ற படங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதனிடையே அவர் தற்போது வரவிருக்கும் காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் காலப்பட படபிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேரள் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் டொவினோவின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. கடுமையான வலி இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உள் இரத்தப்போக்குடன் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார் என செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இது தொடர்பாக அவரின் பிஆர்ஓ நிகில் முருகன் வெளியிட்டுள்ள டடுவிட்டர் பதிவில், டொவினோ தாமஸ் கால படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் வீரர் பும்ரா- நடிகை அனுபமா திருமணம் ; அனுபமாவின் தாயார் மறுப்பு 'வதந்திகளை வேடிக்கை பார்க்கிறோம்'
கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை அனுபமாவின் தாயார் மறுத்துள்ளார்.
2. படப்பிடிப்பில் விபத்து நடிகர் பகத் பாசிலுக்கு காயம்
'மலையன் குஞ்சு' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பகத் பாசிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
3. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் டாப்ஸி ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
4. மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர ஆசை உண்டா? நடிகர் சிவகார்த்திகேயன் பதில் -வீடியோ
சென்னை தலைமைச் செயலகத்தில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா 128 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்குகினார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
5. இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.