உலக செய்திகள்

ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம் + "||" + Jaisankar talks: India-Japan cyber security pact

ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம்

ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்தியா-ஜப்பான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இணைய பாதுகாப்பு ஒப்பந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது.
டோக்கியோ,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றுள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்தனர். இரு நாடுகளுக்கிடையிலான வலிமையான ஒத்துழைப்பு, கொரோனா உருவாக்கிய சவால்களை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தனர்.


இந்த பேச்சுவார்த்தையில், இணைய பாதுகாப்பு ஒப்பந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது. இது, தகவல் கட்டமைப்பு, 5ஜி சேவை, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் ஒப்பந்தம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது: முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து
இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் டோனிக்கு நன்றாகத் தெரியும் என்று ஹோல்டிங் கூறியுள்ளார்.
2. நேபாள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா முன்னுரிமை - இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்
நேபாள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா முன்னுரிமை அளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
3. ஜோபைடன் தலைமையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் விரிவடையும் - ஜெய்சங்கர்
ஜோபைடன் தலைமையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் விரிவடையும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
4. பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ரஷியா அறிவுறுத்தல்
இந்தியாவும், சீனாவும் தங்களுக்கிடையிலான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கூறியுள்ளது.
5. கொரோனா காரணமாக இந்தியாவின் பொது கடன் விகிதம் 90 சதவீதமாக உயரும் - சர்வதேச நிதியம் தகவல்
கொரோனா பரவலை எதிர்கொள்வதற்காக நாட்டின் பொது செலவினங்கள் அதிகரித்து உள்ளன. இதனால் நாட்டின் பொது கடன் விகிதம் 90 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது.