தேசிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிப்பு; ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவர் + "||" + Vulnerability to corona infection; The student who wrote the exam in the ambulance

கொரோனா தொற்றால் பாதிப்பு; ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவர்

கொரோனா தொற்றால் பாதிப்பு; ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆம்புலன்சில் தேர்வு எழுதினார்.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அர்ப்போகரா பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் திருநாக்கரா பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அவரது படிப்பிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியது. தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அந்த மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து கொரோனா சிகிச்சை மையத்தில் மாணவர் சேர்க்கப்பட்டார். இதனால் அவர் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்ததையடுத்து அவரை ஆம்புலன்சில் வைத்து தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி அந்த மாணவர் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆம்புலன்சில் தேர்வு நடந்த மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தேர்வுக்கான வினாத்தாளை மாணவரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர் ஆம்புலன்சுக்குள் அமர்ந்து தேர்வு நேரமான 11 மணி முதல் 1 மணி வரை தேர்வு எழுதினார். அவர் எழுதிய விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. தேர்வு முடிந்ததும் மாணவர் அங்கிருந்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் அதிர்ச்சி; திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு
பிரான்சில் புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
2. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்த நயன்தாரா
கொரோனா பாதிப்பு காரணமாக சம்பளத்தை குறைத்த கொண்டார் நயன்தாரா.
4. வரும் பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும்; அரசு நியமித்த குழு அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் வரும் 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.05 கோடியாக இருக்கும் என அரசு நியமித்த குழு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
5. 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே சரிவு
இந்தியாவில் 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது.