உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.63-கோடியாக உயர்வு + "||" + The number of corona victims worldwide has risen to 3.63-crore

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.63-கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.63-கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3. 63 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்துக்கொண்டு வைத்திருக்கிறது. தொற்று பரவி கிட்டதட்ட 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் கோர தாண்டவம் அடங்கியபாடில்லை. கொரோனா தொற்று வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது இன்னும் உலகின் முன்னணி நாடுகளுக்கே சவாலாக உள்ளது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் 3 கோடியே 63 லட்சத்து 80 ஆயிரத்து 978 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 63 லட்சத்து 80 ஆயிரத்து 978 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 79 லட்சத்து 19 ஆயிரத்து 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 411 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 59 ஆயிரத்து 975 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 74 லட்சத்து 1 ஆயிரத்து 926 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.