தேசிய செய்திகள்

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்; போர் வீரர்களுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து + "||" + 88th Anniversary of the Indian Air Force; Union Minister Rajnath Singh congratulates the war veterans

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்; போர் வீரர்களுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்; போர் வீரர்களுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு, விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விமான படை நாட்டின் வான்பகுதியை, எது வந்தபோதிலும், எப்பொழுதும் காக்கும் பணியில் ஈடுபடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நவீனமயப்படுத்துவது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிப்பது ஆகியவற்றின் வழியே இந்திய விமான படையின் போர் புரியும் திறனை மேம்படுத்தும் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

விமான படையின் போர் வீரர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  88 வருட அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் திறமையான செயல்பாடு ஆகியவை இந்திய விமான படை கடந்து வந்த பயணத்திற்கு அடையாளம் ஆக இருக்கிறது என அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல்.லில் 200வது போட்டி; தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து
ஐ.பி.எல்.லில் 200வது போட்டியை விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2. அமெரிக்காவின் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழா வாழ்த்து
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி கொண்டாடும் இந்து அமெரிக்க நண்பர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
3. கொரோனா தொற்று பாதிப்பு டிரம்ப் குணமடைய வெனிசுலா அதிபர் மதுரோ வாழ்த்து
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமடைய வெனிசுலா அதிபர் மதுரோ வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
4. 71-வது நிறுவன நாள்; சீனாவுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
சீனா, இந்தியா இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து உள்ளது.
5. பிறந்தநாள் வாழ்த்து தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்த ரங்கசாமி
கொரோனா அச்சுறுத்தலையொட்டி பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தொண்டர்களை சந்திப்பதை ரங்கசாமி தவிர்த்தார்.