தேசிய செய்திகள்

இந்தியாவில் 68 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு + "||" + Corona damage has crossed 68 lakh in India

இந்தியாவில் 68 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 68 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 68 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.  இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 78,524 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதனால் மொத்த பாதிப்பு 68 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது.  நாடு முழுவதும் 9 லட்சத்து 2 ஆயிரத்து 425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் இதுவரை குணமடைந்து சென்றுள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிப்புகளால் 1 லட்சத்து 5 ஆயிரத்து 526 பேர் மரணமடைந்து உள்ளனர்.  இதுவரை 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனா தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம்
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் தடுப்பூசி போட அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 175- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் மேலும் 1,938- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,938- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலகளவில் 10%க்கு குறைவானோர் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடியை பெற்றுள்ளனர்; உலக சுகாதார அமைப்பு
உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடியை பெற்றுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.46- கோடியாக உயர்ந்துள்ளது.