உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே நேருக்கு நேர் காரசார விவாதம் + "||" + US election 2020: Vice presidential debate begins.

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே நேருக்கு நேர் காரசார விவாதம்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே நேருக்கு நேர் காரசார விவாதம்
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே இன்று நேருக்கு நேர் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஏற்கனவே அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோபிடன் ஆகியோர் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர். இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே இன்று நேருக்கு நேர் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதம் நபாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட மைக் பென்ஸ் கூறியதாவது:-

கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம். அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா உயிரிழப்புகளை குறைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பே டிரம்புக்கு முதன்மையானது. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் வரிச்சலுகைகளை பறித்து விடுவார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட கமலா ஹாரீஸ் பதிலளிக்கும்போது கூறியதாவது:-

டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான செயல்திட்டம் இல்லை. அதிபர் டிரம்பின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். கொரோனாவிற்கு நாடு முழுவதும் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நான் மீண்டும் வெற்றி பெற்றால் 2 முக்கிய விஷயங்கள் நடக்கும் - டொனால்டு டிரம்ப்
நான் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை கொண்டுவர முயற்சிகள் நடக்கும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபடும் மேகன் மெர்க்கல்
இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் மெர்க்கல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடேன் - ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக ஜோ பிடேனை, ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
4. டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு மோசமான ஜனாதிபதி: மைக்கேல் ஒபாமா
நம் நாட்டுக்கு வாய்த்த மோசமான ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மைக்கேல் ஒபாமா கூறி உள்ளார்.
5. அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்
அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் என கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளது.