தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது? - எடியூரப்பா, மந்திரிகளுடன் இன்று ஆலோசனை + "||" + When to open schools in Karnataka Edyurappa, consult with ministers today

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது? - எடியூரப்பா, மந்திரிகளுடன் இன்று ஆலோசனை

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது? - எடியூரப்பா, மந்திரிகளுடன் இன்று ஆலோசனை
கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மந்திரிகள், அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று பாதிப்பு தினசரி 10 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நாட்டில் வருகிற 15-ந் தேதிக்கு பிறகு பள்ளி-கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறையின் ஆலோசனையை கேட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, பள்ளி கல்வித்துறை, மருத்துவ கல்வித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இதில், எந்தெந்த வகுப்புகளுக்கு முதலில் கற்பித்தலை ஆரம்பிக்க வேண்டும், பள்ளிகளை திறந்தால் அங்கு எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

ஆனால், கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவுவதால், எக்காரணம் கொண்டும் பள்ளிகளை திறக்கக்கூடாது என்று பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பூசி கிடைக்கும் வரை, பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என்று கல்வித்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் பள்ளிகளை திறப்பது பற்றி எடியூரப்பா மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது
கர்நாடகத்திற்கு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி: கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை
பறவை காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
3. கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை - மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரம்
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்; இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?
கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக நேற்று 2-வது நாளாக பஸ் போக்கு வரத்து முடங்கியது. இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசுடன் போக்கு வரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டால் பஸ் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.