தேசிய செய்திகள்

"சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேர் மட்டும் அனுமதி" - பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு + "||" + In Sabarimala For the month of Ipasi Puja Only 250 people allowed daily The decision was taken at a meeting chaired by Binarayi Vijayan

"சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேர் மட்டும் அனுமதி" - பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

"சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேர் மட்டும் அனுமதி" - பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
சபரிமலை ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கொரோனா ஊரடங்கால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, சபரிமலையிலும் நவம்பரில் தொடங்கும் மண்டல பூஜைக்கு தினமும் ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் நிலக்கல்லில் பக்தர்களுக்கு ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படும்  எனவும் தெரிவிக்கப்படுள்ளது.  

மேலும் மற்ற வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில்  20 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு விழாக்களின் போது அந்தந்த வழிபாட்டு தலங்களின் வசதிகளை பொறுத்து 40 பேர் வரை அனுமதிக்கலாம் எனவும் கூறப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. 7 மாதங்களுக்கு பிறகு சரணகோஷம் ஒலித்தது: சபரிமலை கோவிலில் பக்தர்கள் அனுமதி - சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம்
7 மாதங்களுக்கு பிறகு சரண கோஷத்துடன் சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு சமூக இடைவெளியுடன் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
2. சபரிமலையில் நவ.16 முதல் பக்தர்கள் அனுமதி: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
சபரிமலையில் நவ.16 முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
3. ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது
ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
4. மண்டல, மகரவிளக்கு சீசனுக்குசபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி -கேரள மந்திரி தகவல்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.