மாநில செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு + "||" + AIADMK MLA Prabhu's wife Soundarya Chennai High Court ordered to produce

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பெண்ணின் தந்தை சாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளை கடத்தி பிரபு திருமணம் செய்துகொண்டதாகவும் அவரிடமிருந்து பெண்ணை மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ பிரபு திருமணம் விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நாளை மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்ற உத்தரவின் படி, மனைவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவேன் என எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.