தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல் + "||" + Congress leaders condole death of Ram Vilas Paswan

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல்

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல்
ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது  வினியோகத்துறை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெர்று வந்தார்.


இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பாஸ்வான் டுவிட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நுகர்பொருள் விவகாரத்துறை மந்திரியாக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான், சில தினங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சையில் இருந்த பஸ்வான் வியாழக்கிழமை புதுடெல்லியில் காலமானார்.

இந்நிலையில்  ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

ராம் விலாஸ் பாஸ்வான் ஜியின் மரணம் குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டோர்கள் தங்களின் வலுவான அரசியல் குரலை இன்று இழந்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.