உலக செய்திகள்

‘கொரோனா, கடவுள் கொடுத்த பரிசு’ டிரம்ப் சொல்கிறார் + "||" + President Trump says catching COVID-19 was a ‘blessing from God’

‘கொரோனா, கடவுள் கொடுத்த பரிசு’ டிரம்ப் சொல்கிறார்

‘கொரோனா, கடவுள் கொடுத்த பரிசு’ டிரம்ப் சொல்கிறார்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா தொற்றால் பாதித்து, ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வாஷிங்டன் வெள்ளை மாளிகை திரும்பினார்.
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா தொற்றால் பாதித்து, ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வாஷிங்டன் வெள்ளை மாளிகை திரும்பினார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல ஓவல் அலு வலகம் (ஜனாதிபதியின் அதிகாரபூர்வ அலுவலகம்) சென்றார்.


அவருக்கு 24 மணி நேரத்துக்கும் மேலாக கொரோனா அறிகுறிகள் ஏதுமில்லை, 4 நாட்களுக்கு மேலாக காய்ச்சலும் இல்லை என்று அவரது மருத்துவ நிபுணர் டாக்ர் சீன் கான்லி தெரிவித்தார்.

டிரம்ப் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் அனைத்து அமெரிக்கர்களும் தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை நாட வேண்டும் என்று கூறி உள்ளார். கடந்த வாரம் அவருக்கு அளிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சிகிச்சை பலன் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பிறகு மிக நன்றாக உணர்கிறேன். இது கடவுளிடம் இருந்து வந்த பரிசு” எனவும் கூறி உள்ளார்.