மாநில செய்திகள்

முககவசம் அணியாதவர்கள் மீது கருணை காட்டக்கூடாது; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + No mercy should be shown to those who do not wear a mask; Dr. Ramdas insisted

முககவசம் அணியாதவர்கள் மீது கருணை காட்டக்கூடாது; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

முககவசம் அணியாதவர்கள் மீது கருணை காட்டக்கூடாது; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முககவசம் அணியாதவர்கள் மீது கருணை காட்டக்கூடாது என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முககவசம் அணியாதவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அது நல்ல கேள்வி. அருமையான யோசனை. கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைக்காதவர்களுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டப்பட வேண்டும்!

கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணியும்படி உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பிரதமரும், முதல்-அமைச்சரும் கூறுகின்றனர். விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியாகின்றன. நானும் அறிவுறுத்தி வருகிறேன். இவ்வளவுக்கு பிறகும் திருந்தாமல் செயல்படுவது குற்றம் அல்லவா?.

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 90 சதவீத மக்கள் முககவசம் அணிவதில்லை என்று ஆணையரே கூறுகிறார். அதன்பிறகும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்?. விதிகளை மதிக்காமல் கொரோனாவை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
‘ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையை குறையுங்கள்’ மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்.
2. சீனாவில் மனித உரிமைகள் மீறல் விவகாரம்: ஐ.நா. அமைப்பு தலையிட இங்கிலாந்து வலியுறுத்தல்
சீனாவில் சிறுபான்மையின மக்கள் மீது நடந்து வரும் மனித உரிமைகள் விவகாரம் பற்றி ஐ.நா. அமைப்பு பேச வேண்டும் என இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.
3. சர்வதேச விமான பயணிகள் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க கர்நாடகா வலியுறுத்தல்
கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
4. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு: வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், அரசு வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தை கைவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5. ஐ.ஐ.டி.களில் நடைபெற்ற சமூக அநீதிகள் குறித்து விசாரணை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விவகாரம்: ஐ.ஐ.டி.களில் நடைபெற்ற சமூக அநீதிகள் குறித்து விசாரணை மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.