மாநில செய்திகள்

குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரெயில் இயக்கம் + "||" + Between Coonoor-Ooty From tomorrow Mountain rail movement

குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரெயில் இயக்கம்

குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரெயில் இயக்கம்
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் குன்னூர் -ஊட்டி இடையே நாளை முதல் மலை ரெயில் இயக்கப்படுகிறது.
ஊட்டி, 

ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் மலை ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டும் நீலகிரியில் இயல்புநிலை திரும்பாமல் இருந்தது. தற்போது ஒரு மாதமாக பூங்காக்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இ-பாஸ் நடைமுறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். 

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரெயிலை இயக்க நீலகிரி கலெக்டர் அனுமதித்து உள்ளார். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) முதல் மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.

குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு கேத்தி, லவ்டேல் வழியாக 9 மணிக்கு ஊட்டியை வந்தடையும். ஊட்டியில் இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு குன்னூரை சென்றடையும். குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை 1.50 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து ஊட்டியில் இருந்து 2 மணிக்கு புறப்பட்டு குன்னூரை மாலை 3.10 மணிக்கு சென்றடையும். மாலை 4 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு 5.15 மணிக்கு ஊட்டியை வந்தடையும். ஊட்டியில் இருந்து 5.30 மணிக்கு புறப்பட்டு 6.40 மணிக்கு குன்னூரை சென்றடையும். நீலகிரியில் மலை ரெயிலில் பயணிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். 

இந்த மலை ரெயில் சேவையை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது கட்டாயம் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாளை முதல் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் தினமும் இயக்கப்படுகிறது. ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் இயக்குவது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2. சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு
சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மெட்ரோ ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு நடத்தினார்.
3. 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு
20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்
4. இ-பாஸ் நடைமுறை ரத்து ஆகிறது; தமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் ஓடும் - புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்றும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வணிக வளாகங்கள், பெரிய கோவில்களை திறக்கலாம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
5. கொரோனா பாதிப்பு எதிரொலி: நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை மார்க்கெட் மூடப்படுகிறது
வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மூடப்படுகிறது. இதனால் மும்பை, நவிமும்பையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.