தேசிய செய்திகள்

பா.ஜ.க. தேசிய துணை தலைவர் சென்ற கார் மீது லாரி மோதல் + "||" + BJP Truck collision on car with National Vice President

பா.ஜ.க. தேசிய துணை தலைவர் சென்ற கார் மீது லாரி மோதல்

பா.ஜ.க. தேசிய துணை தலைவர் சென்ற கார் மீது லாரி மோதல்
பா.ஜ.க. தேசிய துணை தலைவர் அப்துல்லா குட்டி பயணம் செய்த கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,

பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவராக இருந்து வருபவர் அப்துல்லா குட்டி.  இவர் கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் இருந்து கண்ணூர் நோக்கி தனது காரில் நேற்றிரவு பயணம் செய்துள்ளார்.

அந்த கார் மலப்புரம் பகுதியில் வந்தபொழுது, லாரி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  இதுபற்றி கல்பகன்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை