தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு + "||" + Earthquake in Arunachal Pradesh; Recorded as 3.0 in Richter

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

வடகிழக்கு மாநில பகுதிகளில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் தவாங் நகரில் இன்று காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதன்படி, இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.

இதேபோன்று, மணிப்பூரின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.  எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை ஆயிரகணக்கான மக்கள் வெளியேற்றம்
2. அமெரிக்கா - அலாஸ்காவில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. லடாக்கில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம்
லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
5. அசாமில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அசாமில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் எதுவும் இல்லை