தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சம் கடந்தது + "||" + The number of corona infections in India has crossed 69 lakhs

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சம் கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சம் கடந்தது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 964 பேர் மரணமடைந்து உள்ளனர்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 70,496 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 என்ற எண்ணிக்கையில் இருந்து 69 லட்சத்து 6 ஆயிரத்து 152 என்ற எண்ணிக்கையை அடைந்து உள்ளது.  நாடு முழுவதும் 8,93,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  குணமடைந்தோர் எண்ணிக்கை 59,06,070 ஆக உயர்ந்து உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 964 பேர் மரணமடைந்து உள்ளனர்.  இதனால், கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 526ல் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 490 ஆக உயர்வடைந்து உள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் 1 லட்சம் கடந்துள்ளது.  மொத்த எண்ணிக்கை 69 லட்சம் என்ற அளவை கடந்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவிகிதம் - சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவிகிதமாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
போலந்து நாட்டு அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு
பிரான்சில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது.
5. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்; ஆய்வு முடிவு
அமெரிக்காவில் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.