உலக செய்திகள்

"ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம் + "||" + Trump refuses to participate in virtual debate on Oct. 15: ‘I’m not going to waste my time’

"ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

"ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.  அதற்கான பிரசார பணிகளில் அதிபர் டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் ஆகியோர் தீவிரமுடன் உள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் கலந்து கொள்ளும் 2-ஆவது விவாத நிகழ்ச்சி வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதனிடையே, டிரம்ப் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வெள்ளை மாளிகை திரும்பி உள்ளதால், இந்த விவாத நிகழ்ச்சியை ஆன்லைன் வாயிலாக நடத்த விவாத நிகழ்ச்சியை நடத்தும் கமிட்டி பரிசீலித்து வருகிறது. 

இந்நிலையில், வருகிற 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆன்லைனில் விவாத நிகழ்ச்சி நடந்தால், அதில் பங்கேற்க மாட்டேன் என்றும், ஆன்லைன் விவாதத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.