சினிமா செய்திகள்

கொரோனா வார்டில் செவிலியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நடிகை, மருத்துவமனையில் அனுமதி.. + "||" + Shika malhothra who dedicated to her nurse profession during corona times tested covid positive

கொரோனா வார்டில் செவிலியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நடிகை, மருத்துவமனையில் அனுமதி..

கொரோனா வார்டில் செவிலியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட  நடிகை, மருத்துவமனையில் அனுமதி..
ஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மும்பை

பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா, கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கியது முதல் தான் படித்து பட்டம்பெற்ற செவிலியர் பணிக்கு திரும்பி கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்காக பணிபுரிந்து வந்தார். 

நடிகையாக இருந்து, செவிலியர் பணிக்கு திரும்புவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் படித்து நர்ஸ் பட்டம் பெற்றேன். எப்பொழுதும் என்னை பாராட்டுவதை போன்று இம்முறையும் நாட்டுக்காக சேவை செய்யும் என் முயற்சிக்கும் உங்களின் ஆதரவு தேவை.

கொரோனா வைரஸ் பிரச்சினையால் நான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர முடிவு செய்தேன். நர்ஸாக, நடிகையாக நாட்டிற்கு சேவை செய்ய ஆவலாக உள்ளேன். தயவு செய்து வீட்டில் இருங்கள். அரசுக்கு ஆதரவு அளியுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வார்டுகளில் பணிபுரிந்து வந்த ஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அலட்சியம் காட்டாமல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. படப்பிடிப்பில் விபத்து நடிகர் பகத் பாசிலுக்கு காயம்
'மலையன் குஞ்சு' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பகத் பாசிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
2. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் டாப்ஸி ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
3. மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வர ஆசை உண்டா? நடிகர் சிவகார்த்திகேயன் பதில் -வீடியோ
சென்னை தலைமைச் செயலகத்தில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா 128 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்குகினார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
4. இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.
5. இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை வைத்து பாலாபிஷேகம்
தமிழில் இரண்டு படங்களே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு ரசிகர்களால் கோவில் கட்டப்பட உள்ளது.