தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக இருக்கும்; ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு + "||" + The repo interest rate will remain unchanged at 4%; Notice of the Governor of the Reserve Bank

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக இருக்கும்; ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக இருக்கும்; ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 4% ஆக தொடர்ந்து இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டுக்கான நிதி கொள்கை கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒருமித்த முடிவால் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக தொடர்ந்து இருக்கும் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியானது பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.  ரெப்போ விகிதம் குறையும்போது வீட்டு கடன் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

இதுபற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், நிதி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக நீடிப்பது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.  இதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டு வரையில் தேவைப்பட்டால், நடப்பிலுள்ள நிதி கொள்கை நிலைப்பாட்டை தொடருவது என்றும் நிதி கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.  வங்கி விகிதம் மாற்றமின்றி 4.2% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் மாற்றமின்றி 3.35% ஆகவும் இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

2021ம் ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5% வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பணவீக்கம் செப்டம்பரில் தொடர்ந்து உயரும் என ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.  ஆனால், 3வது மற்றும் 4வது காலாண்டில் இலக்கை நோக்கி பணவீக்கம் மெல்ல நகர கூடும் என்றும் எங்களுடைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு முதல்-அமைச்சர் அறிவிப்பு
புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
2. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் மற்றொரு மசோதா கொண்டு வரப்படும்; காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டசபையில் மத்திய அரசின் வேளாண்சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்படும் என காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார்.
3. மாநில மின் நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் மந்திரி நிதின் ராவத் அறிவிப்பு
மராட்டிய மாநில மின் பகிர்மான நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சார துறை மந்திரி நிதின் ராவத் தெரிவித்து உள்ளார்.
4. புதுவை மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி மாநில மக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
5. மராட்டியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.